கோவையில் அவிநாசி சாலை, திருச்சி சாலை, சக்தி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, பாலக்காடு சாலை ஆகிய சாலைகள் உள்ளது. இந்த சாலைகளில் ஆங்காங்கே போக்குவரத்து சிக்னல்கள் உள்ளது. அங்கு போக்குவரத்தை கண்காணிக்க போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். சில சிக்னலில் வாகன ஓட்டிகள் கூடுதல் நேரம் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது வாகன ஓட்டிகளுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனை போக்குவதற்காக மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து போக்குவரத்து சிக்னலில் […]
