நாகையில் ரயிலில் அடிபட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் வெளிப்பாளையம் பகுதியில் ரயில் தண்டவாளத்தில் ஒரு வாலிபர் உடல் நசுங்கி இறந்து கிடந்துள்ளார். அவருக்கு 30 வயது இருக்கும். இதை பார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாகை ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பேரில் ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையிலான காவல்துறையினர் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு […]
