கேரள மாநிலத்தில் சமூக ஆர்வலராக அறியப்படுபவர் ரெகானா பாத்திமா. முன்பாக சபரி மலையில் பெண்களை அனுமதிக்க இயலாது என பக்தர்கள் போராட்டம் நடத்திய சமயத்தில், கோயிலுக்கு சென்று பல சர்ச்சையில் சிக்கியவர் ரெகானா. இதையடுத்து மாட்டு இறைச்சி குறித்த ஒரு வீடியோவை சமூகஊடகங்களில் அவர் வெளியிட்டார். அத்துடன் குழந்தைகளை வைத்து தன் அரைநிர்வாண உடலில் ஓவியம் வரைந்து சமூகஊடகங்களில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இந்த நிலையில் ரெகானாவின் தாய் பியாரி போலீஸ் நிலையத்தில் புகார்மனு ஒன்றை அளித்துள்ளார். […]
