நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில், சி எஸ் கே அணி பந்து வீச்சிற்கு ,அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், அணியின் கேப்டன் தோனிக்கு ரூபாய் 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 14வது ஐபிஎல் தொடரின் ,2-வது லீக் போட்டியானது , நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிஎஸ்கே -டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங்கை தேர்வு செய்ததால், சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது. […]
