பெரம்பலூர் வேப்பந்தட்டை அருகே வாகன சோதனையின்போது லாரி டிரைவரிடம் இருந்து ஆவணமில்லாத ரூ. 80 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள உடும்பியத்தில் கனிம வளத்துறை துணை தாசில்தார் பாக்யராஜ் தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு தஞ்சாவூர் நோக்கி சேலத்திலிருந்து மினி லாரி ஒன்று வந்தது. அதனை பறக்கும் படை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.80 ஆயிரத்து 100 […]
