பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தினால் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது. அவரின் பிரதமர் பதவியும் பறிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் இளைய சகோதரரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். முன்னதாக ஷபாஸ் ஷெரீப், பஞ்சாப் மாகாணத்தின் முதல்-மந்திரியாக கடந்த 2008-2018 வரை பதவி வகித்தார். இந்த 11 ஆண்டுகால ஆட்சியில் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அவரின் குடும்பத்தினர் பல்வேறு […]
