தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். இதுபற்றி அவர்வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களிலும் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் மட்டும் ஒரு லட்சம் ஏக்கருக்கும் மேற்பட்ட […]
