இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் பதில் அளித்துள்ளார். இந்தியாவில் 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி எடுத்த பணமதிப்பிழக்க நடவடிக்கையில், நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. நாட்டில் பயங்கரவாதம், கள்ள நோட்டு மற்றும் கருப்பு பணம் ஆகியவற்றை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. இதனையடுத்து ரூ.2000 நோட்டு வெளியிடப்பட்டது. அதோடு புதிய 500 […]
