ராஜஸ்தானில் அரசியல் நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் ஒரு எம்எல்ஏவின் விலை 15 கோடி ரூபாய் என்ற அளவில் குதிரை பேரம் நடைபெற்று வருவதாகவும் முதலமைச்சர் திரு அசோக் கெலாட் குற்றம்சாட்டி உள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சர் திரு அசோக் கெலாட் எதிராக காங்கிரஸ் அதிருப்தி தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி உயர்த்தியதால், துணை முதலமைச்சர் மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்காததால் சச்சின் பைலட் மற்றும் […]
