ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ரூ11.33 கோடி செலவில் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைப்பதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆலங்குளம் – தென்காசி ரோட்டில் மலைக் கோவில் அடிவாரத்தில் அரசு மகளிர் கல்லூரிக்கு நிரந்தர கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாக்கியுள்ளார். […]
