நாற்பத்தி நான்காவது செஸ் ஒலிம்பியாட் போட்டியை முன்னிட்டு தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கான செஸ் விளையாட்டு போட்டிகளுக்கு ரூபாய் ஒரு கோடி நிதியை விடுவித்து அரசாணை வெளியிட்டுள்ளது. மாவட்ட மற்றும் மாநில அளவில் செஸ் போட்டிகள் நடத்தி அதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சர்வதேசச் வீரர்களுடன் கலந்துரையாட வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் போட்டிகள் நடைபெற உள்ளன.
