தொட்டிலில் படுத்திருந்த 3 வயது குழந்தை ருத்திராட்ச கொட்டையின் கயிறு இறுக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்துள்ள அக்கலாம்பட்டியில் வசித்து வரும் கோபி என்பவருக்கு பிரியா என்ற மனைவியும், 3½ வயதில் முகுல் என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றுள்ளனர். இதனால் குழந்தையை கோபியின் பெற்றோர் வீட்டில் விட்டு சென்றனர். இதனையடுத்து குழந்தையை தொட்டிலில் படுத்திருந்த சமயத்தில் முகுல் கழுத்தில் கட்டபட்டிருந்த ருத்திராட்ச கொட்டையின் […]
