“மெட்டா” என்று பெயரிடப்பட்டிருக்கும் முகநூல் நிறுவனம் கடந்த 2021-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 8% வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது இந்த நிறுவனம் 18 வருட காலத்தில் முதல்முறையாக வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. கடந்த காலாண்டில் முகநூல் பயனாளர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. அதேபோல் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்தது பயனாளர்களின் எண்ணிக்கை குறைவிற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதற்கிடையே மெட்டா, இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதத்தில் செல்லிடப்பேசி கட்டணங்கள் உயர்த்தப்பட்டது […]
