கொரோனவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை திமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் […]
