பாலிவுட் நடிகர் சுஷாந்த் மரணவழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர் ரியா சக்ரபோர்த்தியை வரும் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் சிறையிலடைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டி வந்தனர். இவ்வழக்கில் சுஷாந்த்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது சுஷாந்த்தின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இதுதொடர்பாக சிபிஐ அமலாக்கத் துறை […]
