உத்திரகாண்ட் மாநிலத்தில் உள்ள ரிஷிகேஷில் பாஜக அரசில் அமைச்சராக இருந்த வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா என்பவருக்கு சொந்தமான ரிசார்ட் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ரிசார்ட்டில் அங்கிதா பண்டாரி (19) என்ற இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்த பெண்ணிடம் ரிசார்ட்டுக்கு வருபவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ளுமாறு ரிசார்ட்டில் வேலை செய்பவர்கள் கூறியுள்ளனர். இதற்கு அங்கிதா மறுப்பு தெரிவித்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக பேசி முடிவெடுக்க கடந்த 18-ஆம் தேதி இளம்பெண்ணை வெளியே […]
