உடல்நலக்குறைவால் மனமுடைந்த ரிக் வண்டி டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையத்தை அடுத்துள்ள வால்நாயக்கன்பாளையம் அருந்ததியர் காலனியில் கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். ரிக் வண்டி டிரைவரான இவருக்கு சுப்புலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் கருணாநிதி மனமுடைந்து காணப்பட்டுள்ளார். இதற்கிடையே கருணாநிதிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வாழ்வில் விரக்தியடைந்த கருணாநிதி வீட்டில் விஷம் குடித்து தற்கொலை […]
