சென்னை ராயபுரம் அரசு குழந்தைகள் காப்பகத்தில் மேலும் 12 சிறுவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 20,993 ஆக உயர்ந்துள்ளது. சென்னையிலேயே அதிகமாக ராயபுரம் மண்டலத்தில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது. ராயபுரத்தில் இதுவரை 3,717 பேர் கொரோனோவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ராயபுரம் மண்டலத்தில் உள்ள ஒரு அரசு குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் மொத்தம் 45 சிறுவர்கள் உள்ளனர். […]
