திருமணமான காதல் ஜோடிகளை அரிவாளால் தாக்கிய பெண்ணின் உறவினர் 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் விக்டோரியா நகரில் வினித் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசிக்கும் பில்கேஷி என்ற பெண்ணை காதலித்து வந்தார். இதற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேறி கடந்த 21ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்குப்பின்பு பாதுகாப்பு கேட்டு ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளனர். இதனையடுத்து […]
