Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பழுதடைந்த பள்ளி மேற்கூரை…. திடீரென கீழே விழுந்த மரக்கட்டை…. காயமடைந்த சிறுவர்கள்….!!

பள்ளியின் ஓட்டுக்கூரையில் இருந்து மரக்கட்டை கீழே விழுந்ததில் 3 சிறுவர்கள் காயமடைந்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள எஸ்.வாகைக்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 45 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியில் 2 கட்டிடங்கள் உள்ள நிலையில் அதில் ஒரு கட்டிடம் பழுதடைந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை இடிப்பதற்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எஸ்.வாகைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளார். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆன்லைன் மோசடியா….? இந்த எண்ணை தொடர்பு கொண்டால் போதும்…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்….!!

ஆன்லைன் மூலம் மோசடி நடந்தால் பாதிக்கப்பட்டவர்கள் 24 மணிநேரத்திற்குள் 1930 இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர். சமீப காலமாக வங்கியில் இருந்து பேசுவதாகவும், ஏ.டி.எம் கார்டை புதுப்பிக்க வேண்டும், செல்போன் எண்ணிற்கு பரிசு விழுந்துள்ளது, முகநூல் மூலம் உதவி கேட்டும்,ஆபாச வீடியோ லிங்க் மூலம் பணம் கேட்டு மோசடி செய்வது என நாள்தோறும் பல்வேறு வகைகளில் மோசடி நடந்து வருகிறது. இந்நிலையில் படிக்காதவர்கள் மட்டுமல்லாமல் நன்கு படித்தவர்களின் மோசடியின் வலையில் சிக்கி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நிலைதடுமாறிய பேருந்து…. கால்வாய்க்குள் இறங்கியதால் பரபரப்பு…. அலறிய பயணிகள்….!!

அரசு பேருந்து திடீரென கட்டுபாட்டை இழந்து கால்வாய்க்குள் இறங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து அரசு பேருந்து ஒன்று ராமநாதபுரம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளனர். இந்நிலையில் அந்த பேருந்து கருங்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்ததால் டிரைவர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அப்போது பேருந்து நிலைதடுமாறி அருகே இருந்த கால்வாய்க்குள் இறங்கியது. ஆனால் டிரைவர் துரிதமாக செயல்பட்டு பேருந்தை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வந்ததால் பேருந்தில் இருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இந்து வாலிபர் கொலை…. இந்து முன்னணியினர் கண்டனம்…. அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம்….!!

இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்து ஜனநாயக முன்னணியினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் இந்து ஜனநாயக முன்னணி சார்பில் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.இந்நிலையில் கர்நாடகாவில் இந்து இளைஞர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், பயங்கரவாதத்தை தடுத்து நிறுத்தக்கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை தலைவர் கோதாவரி தலைமை தாங்கியுள்ளார். இதனையடுத்து ஒன்றிய நிர்வாகிகள் திருப்புல்லாணி அரியமுத்து, போகலூர் கருப்பையா, நயினார்கோவில் தியாகராஜன், மண்டபம் சுந்தரமூர்த்தி, பாம்பன் காசிநாதன், ராமநாதபுரம் பாலகிருஷ்ணன், செல்வராஜ், […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் நடத்திய சோதனை…. வசமாக சிக்கிய நபர்…. 91 பாட்டில்கள் பறிமுதல்….!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 91 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் திட்டக்குடி சந்திப்பு சாலையில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ரோஸ்லெட் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது மது பாட்டில்கள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்தபோது சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பையில் இருந்த சுமார் 91 மது பாட்டில்களை பறிமுதல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடரும் சட்டவிரோத செயல்…. சுடுகாட்டில் நின்று கொண்டிருந்த வாலிபர்…. வளைத்து பிடித்த போலீஸ்….!!

சட்ட விரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை கைது செய்த போலீசார் 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் தலைமையில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்திராநகர் சுடுகாடு பகுதியில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர் மேலக்கோட்டை பகுதியை சேர்ந்த முகம்மது கனி(22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் 1 கிலோ 250 கிராம் கஞ்சா விற்பனைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள்

ஆட்டை திருப்பி கேட்ட விவசாயி…. வாலிபர் செய்த கொடூர செயல்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு…!!

திருடிய ஆட்டை திருப்பி கேட்டதால் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கண்ணன்புதுவன் கிராமத்தில் வசித்து வரும் விவசாயியான சுப்பிரமணி என்பவர் தனது வீட்டில் வெள்ளாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் அவரது ஆடு ஒன்றி திருடி சென்றுள்ளார். இதனையறிந்த சுப்பிரமணி சத்தியமூர்த்தியிடம் சென்று ஆட்டை திருப்பி கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சத்தியமூர்த்தி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நாங்க கடன் தருகிறோம்…. முகநூலை நம்பி ஏமார்ந்த வாலிபர்…. போலீஸ் தீவிர விசாரணை….!!

முகநூல் மூலம் கடன் வாங்கி தருவதாக கூறி 76 ஆயிரம் ரூபாயை ஏமாற்றிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினம் அருகே உள்ள காயிதேமில்லத் தெருவில் சாகுல் ஹமீது என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சாகுல் ஹமீது தனது செல்போனில் முகநூல் பக்கத்தை பார்த்துகொண்டிருந்த போது ஒரு நிறுவனத்தின் பெயரில் கடன் தருவதாக இருந்துள்ளது. இதனை பார்த்த சாகுல் ஹமீது அதில் குறிப்பிட்ட எண்ணை தொடர்பு கொடு பேசினார். அப்போது மறுமுனையில் பேசிய மர்மநபர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சீக்கிரம் மின்சார ரயில் வந்துரும்…. முழுவீச்சில் நடைபெறும் பணிகள்…. ரயில் பாதையில் மணல் அகற்றம்….!!

மின்சார ரயில்களை இயக்குவதற்காக ரயில்பாதையில் நவீன இயந்திரங்கள் மூலம் மணல் அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. ராமநாதபுரத்தில் இருந்து மதுரை இடையே மின்சார ரயில்கள் செல்லும் வகையில் மின்வழிப்பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மின்சார ரயில்களை இயக்குவதற்காக ரயில்பாதையில் சீரமைப்பு பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அதன்படி கூறியோர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள ரயில்பாதையில் நவீன இயந்திரம் மணல் அகற்றும் பணிகள் நடைபெற்றுள்ளது.

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நடத்துனரை அடித்த பயணி…. ஒன்று திரண்ட ஓட்டுனர்கள்…. போராட்டத்தால் ஏற்பட்ட பரபரப்பு….!!

அரசு பேருந்து நடத்துனரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று பரமக்குடியை நோக்கி சென்ர்ல்ளது. இந்த பேருந்தில் நடந்துனராக முத்துகுமார் என்பவர் இருந்தார். அப்போது பேருந்தில் பயணித்த ஒருவருவரும் முத்துக்குமாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் ஆத்திரமடைந்த அந்த பயணி திடீரென நடத்துனர் முத்துக்குமாரை அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த அரசு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எந்த வாகனமா இருக்கும்…. பறிபோன முதியவர் உயிர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியை அடுத்துள்ள எஸ்.வாகைகுளம் பகுதியில் சீனி(70) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று முதியவர் பூப்பாண்டியபுரம் அருகே சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி சீனி சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த சாயல்குடி போலீசார் விரைந்து சென்று சீனியின் உடலை மீட்டு கடலாடி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்…. காவல் நீட்டிப்பு செய்து உத்தரவு…. 12 பேர் சிறையில் அடைப்பு….!!

இலங்கை கடற்ப்படையினர் கைது செய்த 12 தமிழக மீனவர்களை வருகின்ற 28ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 12ஆம் தேதி சுமார் 12 மீனவர்கள் 2 விசைப்படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் இலங்கை கடற்படையினர் அவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து  யாழ்பாணம் சிறையில் அடைத்தனர். இதனையடுத்து அவர்களை நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது வலக்கை விசாரித்த நீதிபதி கைது செய்யப்பட்ட மீனவர்கள் 12 பேரையும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“உண்டியலுக்காக இப்படியா பண்ணுவீங்க”…. கொள்ளையர்கள் செய்த கொடூரம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

பட்டபகலில் மூதாட்டியை கொலை செய்துவிட்டு உண்டியலில் இருந்த பணத்தை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அடுத்துள்ள ஆயிரவேலி கிராமத்தில் பூங்கோதை (65) என்ற மூதாட்டி வசித்து வருகிறார். இவரது மூத்த மகன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில், பூங்கோதை தன் 2-வது மகன் ஈஸ்வரனுடன் வசித்து வந்தார். ஈஸ்வரன் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மதியம் ஈஸ்வரன் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இன்னும் நெறைய கிடைக்கும்…. வாட்சப்பை நம்பி…. பணத்தை பறிகொடுத்த பெண்….!!

வாட்ஸ்-அப்மூலம் போலியான தகவல் அனுப்பி 2 1/2 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முல்லைநகர் பகுதியில் ஜெயந்தி (38) என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு வாட்ஸ்-அப் எண்ணிலிருந்து அவருக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று இருந்துள்ளது. இதனை நம்பிய ஜெயந்தி வாட்சப் மூலம் பதிலளித்து இதுகுறித்து விபரங்களை கேட்டுள்ளார். இதனை கேட்ட சிறிது நேரத்திலேயே ஜெயந்தியின் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தொடர்ந்து நடக்கும் கடத்தல்…. லாரியை மடக்கிய போலீசார்…. வசமாக சிக்கிய நபர்….!!

சட்ட விரோதமாக கடத்திய மணலை லாரியுடன் சேர்த்து பறிமுதல் செய்த போலீசார் கடத்தலில் ஈடுபட்ட நபரையும் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் பஜார் இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டியன் தலைமையில் காவல்துறையினர் தொருவளூர் காலனியில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த லாரியை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் லாரியில் அனுமதியின்றி ஆற்றுப்படுகையில் இருந்து மணலை திருயது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட ஆர். காவனூரில் வசிக்கும் சௌந்தரராஜன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

நேருக்கு நேர் மோதிய வாகனம்…. கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட கதி…. போலீஸ் விசாரணை….!!

நேருக்கு நேர் இருசக்கர வாகனம் மோதியதில் கணவன்-மனைவி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாரதி நகரில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது மனைவி முனீஸ்வரியுடன் இருசக்கர வாகனத்தில் சந்தைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து சந்தைக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சந்திரசேகரின் இருசக்கர வாகனத்தோடு மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் சந்திரசேகர் மற்றும் முனீஸ்வரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பில் கலெக்டருக்கு ஆப்பு வைத்த விவசாயி…. கையும் களவுமாக பிடித்த…. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்….!!

விவசாயியிடம் லஞ்சம் கேட்ட பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள டி.கிளியூர் பகுதியில் வசித்து வரும் விவசாயியான கணேசன் என்பவர் தன்னுடைய 559 நெல் மூட்டைகளை விற்பனை செய்ய ஆன்லைனில் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அதில் குறிப்பிட்ட தேதியில் நெல் மூட்டைகளை பாண்டுக்குடி நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றார். இதனைதொடர்ந்து நெல் கொள்முதல் செய்துவிட்டு அதற்க்கான ரசீது கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்த பொறுப்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதே வேலையா போச்சு…. மீன் பிடித்து கொண்டிருந்தபோது…. இலங்கை கடற்ப்படையினர் செய்த செயல்….!!

நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்ப்படையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து தமிழகத்தை சேர்ந்த சுமார் 1,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றனர். இந்நிலையில் அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருக்கும்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 6 மீனவர்களை கைது செய்த நிலையில் ஒரு விசைப்படகை பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்கள் ராமேஸ்வரத்தை சேர்ந்தவர்களா அல்லது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அடடே….! 100 கோடியில் அமைக்கப்படும்…. பிரம்மாண்ட அனுமன் சிலை…. கோலாகலமாக நடந்த பூமி பூஜை….!!

ராமேஸ்வரத்தில் சுமார் 100 கோடி செலவில் 108 அடி உயர அனுமன் சிலை அமைப்பதற்க்கான பூமி பூஜை நடைபெற்றுள்ளது. ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவில் இந்தியாவில் உள்ள மிக முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. ராமர் பாதம்பட்ட இந்த கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கடற்கரையில் சுமார் 108 அடி உயரத்தில் அனுமன் சிலை அமைப்பதற்கான பூமி பூஜை நேற்று ராமேஸ்வரம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இனிமே சாகும் வரை சிறை தான்…. சிறுமிக்கு பாலியல் தொல்லை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்பளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் ஹாஜா முகமது என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஹாஜா முகமது அதே பகுதியில் விளையாடி கொண்டிருந்த 4 வயது சிறுமியை மிட்டாய் வாங்கி கொடுப்பதாக வீட்டிற்கு அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக கீழக்கரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

“ஏன் வேலை வாங்கி கொடுக்கல”…. ஊராட்சி தலைவியின் கணவருக்கு கத்திகுத்து…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

மனைவிக்கு வேலை வாங்கி தராததால் ஆத்திரமடைந்த நபர் ஊராட்சி தலைவியின் கணவரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள பாப்பிரெட்டியாப்பட்டி ஊராட்சி தலைவியாக திம்மக்காள் என்பவர் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது கணவன் சித்தையன் (55) சம்பவத்தன்று இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தபோது அதே பகுதியை சேர்ந்த செல்வசுப்பிரமணியன்(31) என்பவர் திடீரென சித்தையனிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவரது மனைவிக்கு வேலை வாங்கி தராததை கண்டித்து ஆபாசமாக பேசியுள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதெல்லாம் ரொம்ப தப்பு…. வசமாக சிக்கிய 2 பேர்…. டிராக்டர் மற்றும் ஜே.சி.பி பறிமுதல்….!!

சட்ட விரோதமாக கண்மாயில் மணல் அள்ளிய 2 பேரை கைது செய்த போலீசார் டிராக்டர் மற்றும் ஜே.சி.பியை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள கோவிலாங்குளத்தில் உள்ள வேடங்கூட்டம் கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளிப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் சத்திய நாராயணன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது கண்மாயில் மணல் அள்ளிக்கொண்டிருந்த மோயங்குளம் பகுதியை சேர்ந்த முனியசாமி, மங்களம் பகுதியை சேர்ந்த தயானந்தன் ஆகிய 2 பேரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென தடுமாறிய வாகனம்…. பறிபோன வாலிபர் உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

இருசக்கர வாகனம் நிலைதடுமாறு கீழே விழுந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கூரியூர் பகுதியில் முகம்மது யாசின் (வயது 35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சத்திரக்குடி பகுதிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது லாந்தை காலனி அருகே சென்ற போது இருசக்கர வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து முகம்மது யாசின் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி வழியாக சென்றவர்கள் முகம்மது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய லாரி…. துடிதுடித்து பலியான தொழிலாளி…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது லாரி மோதியதில் தொழிலாளி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள கீழசித்தூர்வாடி கிராமத்தில் சத்தியராஜ் (33) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று சத்தியராஜ் வேலையை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது புதுப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த லாரி திடீரென சத்தியராஜ் மீது மோதியுள்ளது. இந்த கோர […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மீன் பிடிக்க சென்றபோது….. நடுக்கடலில் வைத்து 6 பேர் கைது….. சிறையில் அடைத்த இலங்கை கடற்படையினர்….!!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் 6 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்துள்ள நம்புதாளை பகுதியில் வசித்துவரும் குமரேசன்(40) என்பவருடைய நாட்டு படகில் அதே பகுதியை சேர்ந்த பாலு(47), ரெங்கதுரை(48), முத்துக்குமார்(32), பூபதி(32), மனோஜ்குமார்(25), கண்மாய்க்கரையான்(64) ஆகியோர் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். இநிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடிக்க வந்ததாக கூறி  […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையில் சென்று கொண்டிருந்த முதியவர்…. வழியில் ஏற்பட்ட விபரீதம்…. வாலிபர் கைது….!!

சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் திருப்புல்லாணி அடுத்துள்ள மொட்டையன் வலசை பகுதியின் பாக்கியம் என்ற முதியவர் வசித்து வருகிறார். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று ரெகுநாதபுரம அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக வந்த இருசக்கர வாகனம் திடீரென நிலைதடுமாறி பாக்கியம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

காரில் வைத்து விற்பனை…. வசமாக சிக்கிய 2 பேர்…. 624 பாட்டில்கள் பறிமுதல்….

சட்ட விரோதமாக மது பானம் விற்பனை செய்த 2 பேரை கைது செய்த போலீசார் 624 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அடுத்துள்ள தந்தூரணி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அப்பகுதியில் வெகு நேரமாக நின்று கொண்டிருந்த காரை சந்தேகத்தின் அடிப்படையில் சோதனை செய்துள்ளனர். அப்போது அந்த காரில் மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது. இது குறித்தும் காரில் இருந்த ராமேஸ்வரம் எம்.ஆர்.டி நகரை சேர்ந்த நம்புராஜ் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

வாக்காளர்களை திருப்பி அனுப்பிய அதிகாரிகள்… ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்…. ஆணையாளரின் அதிரடி நடவடிக்கை….

வாக்குசாவடிக்கு மாலை 4.45க்கு பிறகு வாக்களிக்க வந்த நபர்களை தேர்தல் அதிகாரிகள் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 60 வாக்குச்சாவடிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேற்று காலை 7 மணி முதல்மாலை 6 மணி வரை மிகவும் விறுவிறுப்பாக நடந்துள்ளது. இந்நிலையில் ராமநாதபுரம் வள்ளல்பாரி நடுநிலைப்பள்ளி ஆண்கள் வாக்குச்சாவடி மற்றும் ஒருசில பகுதிகளில் மாலை 4.45க்கு பிறகு வந்த வாக்களர்களை வாக்களிக்க விடாமல் திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் வாக்களிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மாணவியை வற்புறுத்திய வாலிபர்கள்…. வீட்டிற்குள் புகுந்து மிரட்டல்…. 3 பேர் போக்சோவில் கைது….!!

காதலிக்குமாறு கூறி மாணவிக்கு தொல்லை கொடுத்த 3 வாலிபர்களை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளியை அடுத்துள்ள இருமேனி சுனாமி காலனியில் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவி வசித்து வருகின்றார். இந்நிலையில் உச்சிப்புளியை சேர்ந்த கலைக்குமார்(19), மண்டபம் முகேஷ்(21),  பிள்ளைமடம் பகுதியை சேர்ந்த அஜய்(19) ஆகிய 3 வாலிபர்களும் மாணவியிடம் காதலிக்குமாறு கூறி அடிக்கடி தொந்தரவு செய்து வந்துள்ளனர். இதனையடுத்து சம்பவத்தன்று மாணவி வீட்டில் தனியாக இருந்த சமயத்தில் 3 வாலிபர்களும் வீட்டிற்கு […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அதிகாரிகள் அதிரடி சோதனை…. வசமாக சிக்கிய 5 பேர்…. 22 ஆயிரம் ரூபாய் பறிமுதல்….!!

வாக்காளர்களுக்கு ஓட்டு போட பணம் கொடுத்த 5 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும்படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் தொண்டி 11-வது வார்டு பகுதியில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படை அதிகாரி ஜஸ்டின் பெர்னாண்டோ, சப்-இன்ஸ்பெக்டர் காசி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கையில் தவித்த 47 மீனவர்கள்…. விமானம் மூலம் தமிழகம் வருகை…. சொந்த ஊருக்கு அனுப்பிய அதிகாரிகள்….!!

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு விடுதலை செய்த 47 மீனவர்களை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் சுமார் 56 மீனவர்கள் 6 விசைப்படகுகளுடன் மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி 56 பேரையும் கைது செய்து யாழ்பாணம் சிறையில் அடைத்துள்ளனர். இதனையடுத்து அவர்களை கடந்த மாதம் 25ஆம் தேதி விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் கடந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பணம் கொடுக்க முயற்சி…. பறக்கும் படையினர் அதிரடி நடவடிக்கை…. ஒருவர் கைது….!!

வாக்களார்களுக்கு பணபட்டுவாட செய்ய முயன்ற நபரை கைது செய்த போலீசார் 33 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கீழக்கரை 20-வது வார்டில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா நடப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் பறக்கும் படை அலுவலர் பரமசிவம் தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

10 ஆண்டுகளாக நடந்த வழக்கு…. கள்ளக்காதலியின் கணவர் கொலை…. பேருந்து நடத்துனருக்கு ஆயுள் தண்டனை….!!

கள்ளக்காதலியின் கணவரை கொலை செய்த அரசு பேருந்து நடத்துனருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அடுத்துள்ள இதம்பாடல் பகுதியில் தர்மர் (வயது 40) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பாண்டியம்மாள் (32) என்ற மனைவியும், தர்மபார்த்தசாரதி என்ற மகனும், கார்த்தீஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 2011-ம் ஆண்டு இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற தர்மர் திடீரென மாயமானதாக அவரது தங்கை ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இப்பவே இப்படி பண்றாங்க…. வாலிபர்கள் செய்யும் காரியம்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

தனியாக நடந்து சென்று கொண்டிருந்த நபரை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் அருகே உள்ள வண்டிக்கார முருகையா தெருவில் சேதுபதி ராஜா (27) என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் காட்டூரணியில் பணிக்கு சென்ற சேதுபதி ராஜா மீண்டும் ஊருக்கு திரும்பி சென்று கொண்டிருந்தார். அப்போது குறத்தி அம்மன் கோவில் அருகே வைத்து திடீரென 3 வாலிபர்கள் சேதுபதி ராஜாவை வழிமறித்துள்ளனர். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் கொலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எனக்கு பாதுகாப்பு வேணும்…. செல்போன் கோபுரம் மீது ஏறிய சுயேச்சை வேட்பாளர்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

பாதுகாப்பு கேட்டு சுயேச்சை வேட்பாளர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சாயல்குடி பேரூராட்சி 1-வது வார்டு பகுதியில் சுயேச்சை வேட்பாளராக சரவணமூர்த்தி (வயது 52) என்பவர் போட்டியிடுகிறார். இந்நிலையில் தனக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சாயல்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள செல்போன் கோபுரத்தில் ஏறி சரவணமூர்த்தி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனை அறிந்த கீழக்கரை துணை சூப்பிரண்டு அதிகாரி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டி பெட்டியாக பாட்டில்கள் பறிமுதல்…. ஒருவர் கைது….!!

சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்த போலீசார் 480 மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள சோளியக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் காவல்துறையினர் சோளியக்குடிக்கு சேனூர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு கடையினர் பின்புறம் பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்திருந்த 480 மது பட்டிகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அதை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பைக்குகள்…. பரிதாபமாக பலியான வாலிபர்கள்…. 3 பேருக்கு தீவிர சிகிச்சை….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் பெண்கள் உள்பட 3 பேர் காயமடைந்த நிலையில் 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் சதீஷ்குமார் (29) என்பவர் வசித்து வந்துள்ளார். மீனவரான இவர் தனது சகோதரர் தனபாலன்(25) மற்றும் பெரியம்மா பஞ்சவர்ணம்(35) ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் மேலமடை பகுதியில் உள்ள உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி உள்ளனர். இருசக்கர வாகனத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பேருந்து…. சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதி இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள விவேகானந்தபுரம் பகுதியில் பழனி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரஞ்சனி(22) ராமநாதபுரம் வண்டிக்காரத் தெருவில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராமநாதபுரத்தில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ள ரஞ்சனி தினமும் இரு சக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று வருவது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று காலையில் ரஞ்சனி இருசக்கர வாகனத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

எந்த நடவடிக்கையும் எடுக்கல…. ஆத்திரமடைந்த பொதுமக்கள்…. ஊராட்சி அலுவலகம் முற்றுகை….!!

அடிப்படை நடவடிக்கைகளை செய்து தர வலியுறுத்தி பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள உலையூர் வடக்கு கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் அடிப்படை வசதிகளான சாலை, தெருவிளக்கு, குடிநீர், சுகாதாரம், மயான வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகள் போன்றவை முறையாக செய்து தர வலியுறுத்தி அப்பகுதியில் பல்வேறு முறை ஊராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சாலையை கடக்க முயன்றபோது…. முதியவருக்கு நேர்ந்த விபரீதம்…. அடையாளம் தெரியாதா காரால் பரபரப்பு….!!

முதியவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள நல்கிராம வயல் பகுதியில் கலைமுத்தன் என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் தாமோதரன் பட்டினம் பகுதிக்கு சென்ற கலைமுத்தன் அப்பகுதியில் உள்ள கிழக்கு கடற்கரை சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக வேகமாக வந்த கார் கலைமுத்தன் மீது மோதி விட்டு வேகமாக சென்றது. இந்த கோர விபத்தில் படுகாயமடைந்த கலைமுத்தன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பயங்கரமாக மோதிய பைக்குகள்…. பறிபோன வாலிபர் உயிர்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் காயமடைந்த நிலையில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியை அடுத்துள்ள கிடாக்குலம் பகுதியில் தீபக்ராஜ்(21) என்பவர் வசித்து வந்துள்ளார். பட்டதாரி வாலிபரான இவர் சம்பவத்தன்று கடலாடியை சேர்த்த பூவரச பாண்டி(22), பூதங்குடியை சேர்ந்த ராஜகுமாரன்(27) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் கடலாடியை நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே சாயல்குட்யை நோக்கி தேரங்குளத்தை சேர்ந்த அழகர்நாதன்(47) என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

பூஜை செய்ய வந்த பூசாரி…. கோவிலில் காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்களுக்கு வலைவீச்சு….!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் தர்மமுனீஸ்வரன் கோவில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று காலையில் கோவிலில் பூஜை செய்வதற்காக வந்த பூசாரி மலைராஜ் கோவிலை திறந்து பார்த்தபோது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையறிந்த நிர்வாகிகள் கேணிக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்து வழக்குபதிவு செய்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இதுவரை இவ்வளவு ரூபாய் பறிமுதலா…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…. பறக்கும்படையினர் தீவிர வேட்டை….!!

தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் இதுவரை நடத்திய சோதனையில் சுமார் 29 லட்சம் 90 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்ததாக தெரிவித்துள்ளனர். ராமநாதபுரத்தில் வருகின்ற 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகிப்பதை தடுக்க தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரும் பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். அதன்படி இதுவரையில் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி பணத்தை கொண்டு வந்த 24 பேரிடம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

சைக்கிளில் சென்ற முதியவர்…. வழியில் நடந்த விபரீதம்…. ராமநாதபுரத்தில் கோர விபத்து….!!

வேலையை முடித்துவிட்டு சைக்கிளில் சென்று கொண்டிருந்த முதியவர் மீது இருசக்கர வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனையை அடுத்துள்ள முகில்தகம் வெள்ளாளகோட்டை பகுதியில் ஆரோக்கியம்(70) என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று ஆரோக்கியம் வேலையை முடித்து விட்டு சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது எதிரே வேகமாக வந்த இருசக்கர வாகனம் எதிர்பாராத விதமாக ஆரோக்கியம் மீது மோதியுள்ளது. இந்த கோர விபத்தில் ஆரோக்கியம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் பயங்கரம்….! தாய் கொடூர கொலை…. போலீசில் சரணடைந்த மகன்….!!

குடும்ப தகராறில் பெற்ற தாய் என்றும் பாராமல் மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை அடுத்துள்ள கீழக்கன்னிசேரி பகுதியில் மங்கையரசு என்பவர் வசித்துவருகிறார். ஆடு மேய்க்கும் தொழிலாளியான இவருக்கு அமுதா என்ற மனைவியும், உதயகுமார்(26), முனியசாமி என்ற 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மங்கையரசு வெளியூரில் வேலை பார்த்து வரும் நிலையில் அமுதாவுக்கும் அவரது மூத்த மகன் உதயகுமாருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவது வழக்கம். இதேபோல் சம்பவத்தன்று […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென தீப்பிடித்த வீடு…. பெரும் சேதம் தவிர்ப்பு…. அதிகாரிகள் நேரில் சென்று பார்வை….!!

மின் கசிவு ஏற்பட்டு வீடு திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையை அடுத்துள்ள முள்ளிமுனை பகுதியில் ராக்கம்மாள் என்பவர் வசித்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று இவரது ஓட்டு வீட்டில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இறைச்சி விலை அதிகரிப்பால்…. ஆடு வளர்ப்பில் பொதுமக்கள் ஆர்வம்…. எடை அதிகரிக்க சிறப்பு தீவனம்….!!

சமீப காலங்களில் இறைச்சி விலை அதிகரித்து வருவதால் ஆடுகள் வளர்ப்பதில் பொதுமக்கள் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி, பிரப்பன்வலசை, கொம்பூதி, தேர்போகி, சடைமுனியன் வலசை மற்றும் கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பிரதான தொழிலாக மீன்பிடித்தல் மற்றும் விவசாயம் என இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது சமீப காலமாக ஆட்டு இறைச்சியின் விலை உயர்ந்து வருவதால் கூடுதலாக ஆடுகளையும் அதிகளவில் வளர்ந்து வருகின்றனர். இதனையடுத்து பண்டிகை தினங்களில் ஆடுகளின் தேவையும் அதிகரித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கண்மாயில் கிடந்த மூட்டை…. பொதுமக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பாதுகாப்பாக புதைத்த போலீசார்….!!….!!

செம்மறி ஆடு உயிரிழந்த நிலையில் சாக்கு மூட்டையில் கட்டப்பட்டு கண்மாயில் கிடந்த சம்பவம் அப்பகுதியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள தேளூர் கிராமத்தில் உள்ள கண்மாய்க்குள் மர்மமான முறையில் சாக்கு மூட்டை ஒன்று கிடந்துள்ளது. அந்த மூட்டையில் துர்நாற்றம் மற்றும் ஈக்கள் மேய்ந்து கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதியினர் சந்தேகமடைந்த காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தொண்டி காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் அந்த மர்ம […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

28 ஏ.டி.எம் கார்டுகள் பறிமுதல்…. நுதனமாக செயல்பட்ட வாலிபர்…. விசாரணையில் வெளிவந்த உண்மை….!!

ஏ.டி.எமில் பணம் எடுத்து தருவதுபோல் நடித்து 32 ஆயிரம் ரூபாயை திருடி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி பேருந்து நிலையம் அருகே அரசுடமையாக்கப்பட்ட வங்கியின் ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன் விருதுநகரில் இருந்து கமுதிக்கு வந்த வசந்தா(42) என்ற பெண் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம் மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வாலிபர் ஒருவரிடம் பணம் எடுக்க உதவி கேட்டுள்ளார். அந்த சந்தர்ப்பத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் எச்சரித்து அனுப்பியதால்…. கொத்தனார் செய்த செயல்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

போலீசார் எச்சரித்ததால் மனமுடைந்த கொத்தனார் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் புத்தேந்தல் காலனியில் இலங்கேஸ் என்பவர் வசித்து வந்துள்ளார். கொத்தனாரான இவருக்கு செயசுதா என்ற மனைவி உள்ளார். இவர் மாவட்ட நீதிமன்றத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இலங்கேஸ் மது அருந்திவிட்டு செயசுதாவை கொடுமை படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஜெயசுதா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் காவல்துறையினர் இலங்கேஷை காவல்நிலையத்திற்கு வரவழைத்து […]

Categories

Tech |