மத்திய பிரதேசத்தின் கார்கோன் பகுதியில் ராமநவமி ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறையில் 8 நாட்களுக்கு பின் இன்று முதல் உயிரிழப்பு பதிவாகியிருக்கிறது. உயிரிழந்தவர் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் காணவில்லை என தேடப்பட்டு வந்த இப்ரீஷ் கான் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்தூர் அரசு மருத்துவமனையில் அவரது உறவினர்கள் உடலை அடையாளம் கண்டு இருக்கின்றனர். மேலும் இந்த உயிரிழப்பை மறைக்க காவல்துறையினர் முயற்சி செய்ததாக இப்ரீஷ் கான் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். கார்க்கோன் பகுதியில் வன்முறை வெடித்ததிலிருந்தே […]
