சுகமான, சுமையில்லாத விளையாட்டுடன் கூடிய தரமான கல்வியை மாநில கல்விக் கொள்கை வழங்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார். மேலும் அவர் கூறியதாவது, தனியார் பள்ளி மாணவர்கள் 10 கிலோவுக்கும் கூடுதலாக புத்தக பைகளை சுமந்து செல்ல வேண்டி இருக்கிறது. அதிக எடையுள்ள புத்தக பைகளை சுமப்பதால் மாணவர்கள் உடல் வலியால் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி 5ஆம் வகுப்பு வரை வகுப்புகள் தரைதளத்தில் இருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். இதையடுத்து தொழிற்கல்வியும், விளையாட்டுக்கல்வியும் கட்டாயமாக்கப்பட வேண்டும். வாரத்துக்கு […]
