ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறது. தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012 ஆம் ஆண்டு நடைப்பயிற்சி சென்ற போது கடத்திச் செல்லப்பட்டார். பின்னர் அவர் கொலை செய்யப்பட்டு திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அவரது உடனானது கண்டுபிடிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டை பரபரப்பாகிய ஒரு கொலை சம்பவம். இந்த கொலை வழக்கை முதலில் திருச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் […]
