டெல்லியிலுள்ள எய்ம்ஸ் நிறுவனத்தின் இணையதளம் சென்ற நவ..23ம் தேதி இணைய திருடர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி, அதன் சா்வா்கள் முடங்கியது. இதுகுறித்து மிரட்டி பணம்பறித்தல் மற்றும் இணையதள பயங்கரவாதம் ஆகிய பிரிவுகளின் கீழ் சென்ற நவ..25ம் தேதி சைபா் குற்றப்பிரிவில் வழக்குபதிவு செய்யப்பட்டது. இத்தாக்குதலை அடுத்து புலனாய்வு அமைப்புகளின் பரிந்துரைகளின் அடிப்படையில் இணையதள சேவைகள் முடக்கப்பட்டது. மத்திய அரசின் சொ்ட்-இன் என்ற இந்திய கணினி அவசரநிலை நடவடிக்கைக் குழு, டிஆா்டிஓ, மத்திய புலனாய்வுத் துறை , சிபிஐ, என்ஐஏ […]
