ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சேக்கல் மடத்து ஏலா பகுதியில் கூலி தொழிலாளியான ரவி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ஸ்ரீஜா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ரஞ்சித்(21) என்ற மகன் இருந்துள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஞ்சித் ராணுவத்தில் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெங்களூரு ராணுவ முகாமில் பயிற்சி முடித்த ரஞ்சித் உத்தரகாண்ட் மாநிலத்தில் வேலைக்கு செல்ல இருந்தார். […]
