மயிலாடுதுறை கொள்ளிடம் பகுதியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் மாதம் 6-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ராணுவ வீரர்கள் கொடி அணிவகுப்பு மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பகுதியில் ராணுவ வீரர்கள் மற்றும் காவல்துறையினர் அணிவகுப்பு மேற்கொண்டுள்ளனர். இந்த அணிவகுப்பிற்கு சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரியா […]
