கிளர்ச்சியாளர்களால் கைது செய்யப்பட்ட மாலி அதிபர் மற்றும் பிரதமரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று ஐ.நா சபை பொது செயலாளர் கூறியுள்ளார். மாலி நாட்டின் தலைநகர் பமாகோவில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காதி நகரத்தில் அமைந்துள்ள ராணுவத் தளம் அருகே திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. ராணுவ வீரர்கள் தெருக்களில் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு கொண்டே சென்றனர். ராணுவ டாங்கிகள் நகரத்தில் வந்துள்ளன. அது ராணுவத்தின் ஆட்சிக்கவிழ்ப்பதற்கான சதியாக இருக்கலாம் […]
