ரஷ்யா தனது இராணுவ படைகளை உக்ரேன் மற்றும் கிரிமியாவிற்கு அருகே குவித்துள்ள செயற்கைக்கோள் படங்களை அமெரிக்க தனியார் நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரஷ்யா கடந்த 2014 ஆம் ஆண்டு கிரிமியாவை உக்ரைனிடமிருந்து பிரித்து தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் தனியார் நிறுவனமான மேக்ஸ்சார் கடந்த டிசம்பர் 13 ஆம் தேதி எடுத்த செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டுள்ளது. இதில் ரஷ்யா 100 க்கும் மேலான ராணுவ வாகனங்களையும், டாங்கிகளையும் கிரிமியாவிலுள்ள தளத்தில் நிறுத்தியுள்ளது. ஆனால் கடந்த […]
