பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இங்கு அமைதி ஏற்பட ஒத்துழைப்பு வழங்குமாறு நாட்டு மக்களுக்கு ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “தற்போதைய நெருக்கடியை அமைதியான முறையில் தீர்க்க ஒரு சந்தர்ப்பம் உருவாகி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நாட்டில் அமைதி காக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை மக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு” அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் வற்புறுத்தி உள்ளார்.
