சென்னை ஆவடியில் உள்ள டாங்க் தயாரிப்பு தொழிற்சாலைக்கு 118 அர்ஜுன் எம்கே ஏ 1 டாங்கிகள் தயாரிக்க மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஆர்டர் வழங்கியுள்ளது.. மேக் இன் இந்தியா திட்டத்தில் 118 டாங்குகள் தயாரிக்க ஆர்டர் வழங்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு ஊக்கமளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
