கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மியான்மரில் வீட்டு காவலில் உள்ள ஆங் சாங் சூச்சி உடல்நிலை குறித்து தற்போது ராணுவ ஆட்சிக்குழு தலைவர் தகவல் தெரிவித்துள்ளார். மியான்மர் ஆட்சிக்குழு தலைவர் ஜெனரல் ஆங் ஹலாய்ங் பிப்ரவரி 1 ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னர் முதன் முறையாக ஹாங்காங்கின் பீனிக்ஸ் தொலைக்காட்சியுடனான நேர்காணலில் 2 மணிநேரம் பங்கேற்று பேசியுள்ளார். ஆனால் இன்னும் முழு நேர்காணல் ஒளிபரப்பப்படவில்லை. அதேசமயம் சமூக ஊடகங்களில் மே 22 அன்று நேர்காணலில் வெளியான சில காட்சிகளில் […]
