ஐரோப்பிய ஒன்றியம் மியான்மர் ராணுவ அரசுக்கு சொந்தமான நிறுவனத்திற்கு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மியான்மரில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசை கவில்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியில் ராணுவம் கைப்பற்றியது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தை ராணுவம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கியது. இதனைத் தொடர்ந்து மியான்மரில் ராணுவம் ஆட்சிக்கு வந்து ஓராண்டு காலம் ஆனபோதிலும் ராணுவத்தால் கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறை இன்னும் தொடர்ந்து நடந்து வருகிறது. […]
