இந்தியா,சிங்கப்பூர் இடையேயான பாதுகாப்பு உறவுகள் பற்றி அவர்களுடன் ராணுவ தளபதி விவாதிக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. ராணுவ தலைமை தளபதி ஜெனரல் எம்.எம் நரவானே சிங்கப்பூரில் ஏப்ரல் 4 முதல் 6ம் தேதி வரை மூன்று நாள் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தனது பயணத்தின்போது அவர் அந்த நாட்டு மூத்த ராணுவ அதிகாரிகள் மற்றும் தலைவர்களை சந்திக்க இருக்கிறார். மேலும் பாதுகாப்பு அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி ஏப்ரல் 4ஆம் தேதி ஜெனரல் நரவானே, கிராஞ்சி போர் நினைவு போர் […]
