எல்லையில் அத்து மீறும் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் பயங்கரவாதிகள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில மாதங்களாக அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தாக்குதல் நடத்தி கொண்டிருக்கிறது. அதனைப்போலவே ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து இந்திய ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்தியா அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது. […]
