சட்டவிரோதமாக காரில் மணல் கடத்தியவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அருகே உள்ள ரத்தினகிரி பாலாற்று பகுதிகளில் அடிக்கடி மணல் கடத்தல் நடைபெறுகிறது. இதுகுறித்து தகவலறிந்த ரத்தினகிரி காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் பாலாற்றில் இருந்து வாகனத்தில் பதிவு செய்த எண் இல்லாமல் வந்த ஒரு காரை பார்த்துள்ளனர். இதனை அடுத்து காவல்துறையினர் அந்தக் காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் மணல் மூட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. […]
