Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்கள்…. குவியும் பாராட்டுகள்….!!

ஆம்புலன்சில் சென்று கொண்டிருக்கும் போது கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த மருத்துவ உதவியாளர் மற்றும் செவிலியரை பலரும் பாராட்டி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள மேட்டுநாகலேரி பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகுந்தலா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் நிறை மாத கர்ப்பிணியான சகுந்தலாவுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் சகுந்தலாவின் குடும்பத்தினர் 108 ஆம்புலன்சை வரவழைத்து வளையாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் சகுந்தலாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அவருக்கு பதில் இவரா….? போலீஸ் சூப்பிரண்டு நியமனம்…. வெளியான செய்திக்குறிப்பு….!!

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஓம் பிரகாஷ் மீனா என்பவர் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வந்துள்ளார். தற்போது அவர் ராணிப்பேட்டையில் இருந்து சென்னைக்கு பணிமாற்றம் செய்யப்பட்டார். இதனால் அவருக்கு பதில் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக தேஷ்முக் சேகர் சஞ்சய் என்பவர் நியமிக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் கூறும்போது, ராணிப்பேட்டை மாவட்ட பொதுமக்களுக்கு எப்போதும் பாதுகாப்பாகவும் அரணாகவும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதனாலதான் அப்படி செஞ்சிட்டாங்க…. பெண் தனது குழந்தையுடன் எடுத்த விபரீத முடிவு…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

கணவன் மது அருந்திவிட்டு தகராறு செய்ததால் பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி தனது மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள ஓச்சேரி பகுதியில் தயாளன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு வெண்ணிலா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்தி என்ற மகனும், ஹரிதா என்ற மகளும் உள்ளனர். மேலும் தயாளன் அடிக்கடி மது அருந்தி விட்டு தனது மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பிரபல தொழிலதிபர்” மர்ம நபர்களின் செயல்…. விசாரணையில் தெரியவந்த உண்மை….!!

பிரபல தொழிலதிபரை காரில் கடத்தி வந்த மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வெங்கடேஸ்வரலு என்பவர் வசித்து வருகின்றார். மேலும் தொழிலதிபரான இவர் செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் வெங்கடேஸ்வரலுவை மர்ம நபர்கள் ராணிப்பேட்டை பகுதிக்கு கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வெங்கடேஸ்வரலுவின் செல்போன் சிக்னலை வைத்து மேல்விசாரம் பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“பிரபல தொழிலதிபர்” மர்ம நபர்கள் செய்த செயல்…. விசாரணையில் தெரியவந்த உண்மை….!!

பிரபல தொழிலதிபரை காரில் கடத்தி வந்த மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் வெங்கடேஷ்வரலு என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்போன் டவர் அமைக்கும் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகின்றார். இந்நிலையில் இவரை ஆந்திராவிலிருந்து மர்மநபர்கள் ராணிப்பேட்டை பகுதிக்கு காரில் கடத்தி வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி வெங்கடேஸ்வரலுவின் செல்போன் சிக்னலை வைத்து மேல்விசாரம் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆசிரியரே இப்படி பேசலாமா….? போராட்டத்தில் நடந்த சம்பவம்…. மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவு….!!

போராட்டத்தின்போது உயர் அதிகாரிகளை தரக்குறைவாக பேசிய அரசு பள்ளி ஆசிரியரை மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் கல்வி மாவட்ட அலுவலகம் ஜோதி நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. கடந்த 23 – ஆம் தேதி கல்வி மாவட்ட அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காவல்துறையினரிடம் அனுமதி பெறாமலும், அரசு விதித்துள்ள விதிமுறைகளை பின்பற்றாமலும் நடைபெற்றது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அது பழுதாயிட்டு” குடிநீர் விநியோகம் நிறுத்தம்…. நகராட்சி சார்பில் அறிவிப்பு….!!

மின்மாற்றி பழுது பார்க்கும் பணி நடைபெறுவதால் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆற்காடு பகுதியில் குடிநீர் விநியோகம் செய்யும் மின்மாற்றி பழுதடைந்துள்ளதால் அதனை சரிபார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இதனால் நகராட்சி பொறியாளர் சரவணபாபு இந்த பணி முடியும் வரை ஆற்காடு சுற்றுவட்டார கிராமங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார். இதனால் பொதுமக்களுக்கு சில நாட்கள் குடிநீர் பிரச்சினை இருக்கும் மக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தரமான அறிவிப்பு” பணியிட மாற்றம்…. அதிரடி உத்தரவு பிறப்பிப்பு….!!

தனிப்பிரிவு போலீசார் 9 பேரை பணி இடமாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்ட் ஓம்பிரகாஷ் மீனா தனிப் பிரிவு போலீசாரை பணி இடமாற்றம் செய்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதன்படி ராணிப்பேட்டை மாவட்ட தனிப்பிரிவு ஏட்டாக ரத்தினகிரி வினோத்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சிப்காட் தனிப்பிரிவு போலீசாக ராணிப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் குமரேசனும், ஆற்காடு தாலுகா தனிப்பிரிவு ஏட்டாக, ஆற்காடு தனிப்பிரிவு டவுன் சுப்ரமணியும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஐயோ இப்படியா நடக்கணும்” பறிபோன உயிர்கள்….ராணிப்பேட்டையில் சோகம்….!!

ஏரியில் மூழ்கி சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் முருகையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 10 வயதில் சத்யா என்ற மகளும், 9 வயதில் கிஷோர் என்ற மகனும் இருந்துள்ளனர். இந்நிலையில் கிஷோர், சத்யா ஆகிய இருவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆனந்தியுடன் ஏரியில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக கிஷோர், சத்யா, ஆனந்தி ஆகிய மூவரும் ஏரியில் மூழ்கியுள்ளனர். இதனைப்பார்த்த கிராம மக்கள் அவர்களை மீட்டு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“புதிய முறை” தரமான முடிவு….மாவட்ட கலெக்டரின் தகவல்….!!

மக்களின் குறைகளை எளிதாக தீர்க்க வாட்ஸ்அப் எண்ணை மாவட்ட ஆட்சியர் அறிமுகப்படுத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் மக்கள் தங்களது குறைகளை தெரிவிக்க புதிய முறையை அறிவித்துள்ளார். அதன்படி வாட்ஸ் அப் மூலமாக மக்கள் தங்கள் குறையை எளிதாக குறுஞ்செய்தி வாயிலாக அனுப்பலாம். மேலும் புகைப்படங்கள் காணொளிகள் ஆதாரங்களை அனுப்பி தங்களது குறைகளை நிவர்த்தி செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.இதனையடுத்து 9489829964 என்ற வாட்ஸ்அப் எண்ணை பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அறிமுகப்படுத்தியுள்ளார்.

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதுக்கு போய் இப்படி பண்ணலாமா” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பேட்டை பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்துவருகிறார். இவருக்கு நிதிஷ்குமார் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் நிதிஷ்குமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் நிதீஷ்குமாரின் மனைவி அவரை கண்டித்துள்ளார். இதனையடுத்து மனமுடைந்த நிதிஷ்குமார் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நிதிஷ்குமாரின் உடலை கைப்பற்றி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அவள் இல்லாம இருக்க முடியாது” வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் கதிரவன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு நந்தினி என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அவ்வாறு ஏற்பட்ட தகராறில் நந்தினி தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த கதிரவன் தனது வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துள்ளார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“கொஞ்சம் பார்த்து போகக்கூடாதா” வாலிபருக்கு நேர்ந்த சோகம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

லாரி மீது வேன் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் அறிவழகன் என்பவர் லாரியில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் அறிவழகன் லாரி பழுதானதால் சாலை ஓரம் அதனை  நிறுத்தியுள்ளார். அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த வேன் எதிர்பாராதவிதமாக லாரி மீது பலமாக மோதியது. இதில் வேன் டிரைவர் வினோத் மற்றும் கிளீனர் ரவிச்சந்திரன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து உயிருக்கு போராடிய ரவிச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆசிரியர் கூட்டணி சார்பில்…. நடைபெற்ற இரண்டாம் கட்ட போராட்டம்…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள முதன்மை கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் முதல் கட்ட போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஆசிரியர்கள் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலந்து கொண்டனர். இதன் இரண்டாம் கட்ட போராட்டமானது அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அமர்நாத் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கோவிலின் புனிதத்தை கெடுக்கும் வகையில்…. மர்மநபர்கள் செய்த செயல்…. நிர்வாகிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி….!!

கோவிலில் உள்ள அம்மன் சேலையை மர்மநபர்கள் எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிப்பாக்கம் பகுதியில் 1500 ஆண்டு பழைமை வாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்நிலையில் அங்குள்ள அம்மனுக்கு சாற்றியிருந்த புடவையை மர்ம நபர்கள் எரித்துள்ளனர். இதுகுறித்து இந்து முன்னணியினர் வேலூர் கோட்டை அமைப்பாளர் டி.வி. ராஜேஷ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டதாவது, காவேரிப்பாக்கத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த பஞ்சலிங்கேஸ்வரர் கோவிலில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கு இதை செய்து தாங்க…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை….!!

அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள வாலாஜாபேட்டை பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் குடிநீர் வசதிகள், சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாமல் இங்கு  வசிக்கும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு நடந்து சென்று குடிநீர் பிடித்து வருகின்றனர். மேலும் அங்குள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“சட்டவிரோதச் செயல்” கிடைத்த ரகசிய தகவல்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக மணல் கடத்திய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாங்குப்பம் கிராமத்தில் பார்த்திபன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் பார்த்திபன் பாலாற்று பகுதியிலிருந்து வேனில் மணல் மூட்டைகளை கடத்திச் செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தீவிர ரோந்து பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். அப்போது வேனில் வந்து கொண்டிருந்த பார்த்திபனை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின் நடத்திய சோதனையில் பார்த்திபன் சட்டவிரோதமாக மணல் மூட்டைகளை கடத்தியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“தறிகெட்டு ஓடிய பேருந்து” காயமடைந்த நபர்கள்…. காவல்துறையினரின் விசாரணை….!!

தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 5 நபர்கள் காயமடைந்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் இருந்து ஸ்ரீபெரும்புதூருக்கு, தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான பேருந்து தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ளது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்தானது தறிகெட்டு ஓடி தடுப்பு சுவர் மீது பலமாக மோதியுள்ளது. இதில் பேருந்தில் பயணித்த தொழிலாளர்களில் 5 நபர்கள் பலத்த காயமடைந்துள்ளனர். இதனைப் பார்த்த அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“ஐயோ இப்படியா நடக்கணும்” பறிபோன உயிர்…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

மின்சாரம் தாக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவர் முன்னாள் ராணுவ வீரராக இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இந்நிலையில் சுப்பிரமணி அவரது வீட்டின் மேல் மாடியில் இருக்கும் மின் கம்பியை பழுது பார்த்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்கம்பியில் இருந்து மின்சாரம் பாய்ந்ததில் சுப்பிரமணியன் தூக்கி எறியப்பட்டார். இதனைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்ன காரணமாக இருக்கும்….? இறந்து கிடந்த சிறுத்தை…. மீட்ட வனத்துறையினர்….!!

இறந்து கிடந்த சிறுத்தையை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்ட வனத்துறையினர் மீட்டுள்ளனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கடம்பூர் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வனப்பகுதிக்குள் சிறுத்தை இறந்து கிடப்பதாக வனத்துறையினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புலிகள் காப்பக மருத்துவர் அசோகன் சிறுத்தைக்கு உடற்கூறு பரிசோதனை செய்துள்ளார். இதனையடுத்து சிறுத்தையின் உடல் பாகங்களை உடற்கூறு ஆய்வுக்காக கோவைக்கு அனுப்பி வைத்துள்ளார். இது பற்றி அசோகன் கூறும் போது இறந்த சிறுத்தை 5 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாமே சிதறி கிடக்கு…. சோதனையில் சிக்கிய பொருள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி மூட்டைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பூட்டுதாக்கு பகுதியில் சட்டவிரோதமாக ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நாராயணபுரம் பகுதியில் சந்தேகப்படும்படியாக ஆட்டோ ஒன்று நின்றுள்ளது. இதனையடுத்து ஆட்டோவை சோதனை செய்த அதிகாரிகள் அரிசி சிதறி கிடந்ததை பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் நடத்திய சோதனையில் சட்டடவிரோதமாக […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதன் மதிப்பு 18 லட்சம்” உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் லவக்வகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் லவக்குமார் ஆந்திர மாநிலத்தில் இருக்கும் தனது மனைவியை அழைத்து வர வீட்டை பூட்டி விட்டு சென்றுள்ளார். அதன் பின் வீடு திரும்பிய லவக்குமார் வீட்டின் பின் வாசல் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காலில் விழுந்த தலைமையாசிரியர்…. போராட்டத்தில் நடந்த சம்பவம் …. அதிகாரியின் அதிரடி உத்தரவு….!!

மது போதையில் காலில் விழுந்த தலைமையாசிரியரை முதன்மை கல்வி அதிகாரி பணியிடை நீக்கம் செய்ய செய்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் முதன்மை கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் சாதி ரீதியில் கல்வி அதிகாரிகள் செயல்படுவதாக கூறி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்நிலையில் இந்த போராட்டத்தில் காட்டுப்பாக்கம் ஊராட்சி […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அவன் மிரட்டுறான்…. அச்சத்துடன் இருந்த வியாபாரிகள்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வியாபாரியை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் பகுதியில் வியாபாரிகளை மிரட்டி மர்மநபர் பணம் பறிப்பதாக காவல்துறையினருக்கு ரகசியதகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி அரக்கோணம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள ஒரு கடையில் மர்மநபர் ஒருவர் கடைக்காரரிடம் பணம் தருமாறு மிரட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக சென்ற காவல்துறையினர் அவரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

அதை அவங்களுக்கு கொடுத்தாச்சி….நரிக்குறவர்களுக்கு செய்த பேருதவி…. நடைப்பெற்ற சிறப்பு நிகழ்ச்சி….!!

நரிக்குறவர்களுக்கு முதியோர் உதவித்தொகை மற்றும் புதிய ரேஷன் கார்டு வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வன்னிமேடு பகுதியில் நரிக்குறவர்களுக்கு ரேஷன் கார்டு மற்றும் முதியோர் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  மாவட்ட ஆட்சியரான கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஆற்காடு சட்டமன்ற உறுப்பினரான ஜெ.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்துள்ளார். இதனையடுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்ற துணிநூல் துறை அமைச்சரான ஆர்.காந்தி,எம்.பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

விரைவில் வழங்கப்படும்…. மனு பரிசீலனை…. மாவட்ட ஆட்சியரின் திடீர் ஆய்வு….!!

நஞ்சை நிலம் வகைபாடு மாற்றத்திற்கான தடையில்லா சான்று வழங்குவதற்காக அப்பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நத்தியாலம் பகுதியில் நஞ்சை நிலம் வகைபாடு மாற்றத்திற்கான தடையில்லா சான்று வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் அப்பகுதியில் திடீர் ஆய்வு செய்துள்ளார். அந்த ஆய்வில் தாசில்தார் ஆனந்தன், வருவாய் ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் விரைவில் தடையில்லா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய நால்வர்…. கைது செய்த காவல்துறையினர்….!!

கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்த நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் சட்ட விரோதமாக கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் நான்கு நபர்கள் நின்றுகொண்டிருந்ததை காவல்துறையினர் பார்த்தனர். அதன்பின் காவல்துறையினர் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் ஆற்காடு பகுதியில் வசிக்கும் ஜெயக்குமார், […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“அதனால்தான் வெட்டினேன்” லாரி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்…. விசாரணையில் தெரியவந்த உண்மை….!!

வாலிபரை கொலை செய்த வழக்கில் கைதான லாரி டிரைவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காடு பகுதியில் சில தினங்களுக்கு முன்பு இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி சென்றதில் லாரி டிரைவர் மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்ற மணிகண்டன், அருண் என்பவருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தகராறு முற்றிய போது லாரி டிரைவர் அவர்கள் இருவரையும் சரமாரியாக கத்தியால் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார். […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டி…. மகன் செய்த செயல்…. மீட்ட தொண்டு நிறுவனத்தினர்….!!

சாலையோரம் மயங்கிய நிலையில் கிடந்த மூதாட்டியை தொண்டு நிறுவனத்தினர் மீட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் நகரில் மூதாட்டி ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த ஆதரவற்றோருக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனத்தினர் மூதாட்டியை தண்ணீர் தெளித்து எழுப்பியுள்ளனர். அதன்பின் அவர்கள் மூதாட்டியிடம் அவரைப் பற்றி விசாரித்தபோது என் மகன் என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாக இங்கு கொண்டு வந்து விட்டதாக கூறியுள்ளார். இதுபற்றி அரக்கோணம் காவல்துறையினருக்கு தொண்டு நிறுவனத்தினர்கள் தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் பேரில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொஞ்சம் உதவி செய்யுங்கள்…. மர்மநபர்கள் செய்த செயல்…. கைது செய்த காவல்துறையினர்….!!

வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள காவேரிபாக்கம் பகுதியில் கதிரேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நெமிலி பகுதியில் நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில் தினேஷும் அவரது உறவினருமான கோபி என்பவரும் கலந்து கொண்டனர். அதன்பின் விழா முடிந்ததும் இருவரும் மோட்டார் சைக்கிளில் காவேரிப்பாக்கம் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கண்ணிமைக்கும் நேரத்தில்…. விவசாயிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

மோட்டார் சைக்கிள் மீது டிராக்டர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் பகுதியில் துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் துரை மோட்டார் சைக்கிளில் திருமால்பூரிலிருந்து ஒச்சேரி பகுதிக்கு புறப்பட்டுள்ளார். அப்போது துரை மோட்டார் சைக்கிளில் ஆயர்பாடி பகுதியில் சென்று கொண்டிருக்கும் போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதனால் பலத்த காயமடைந்த துரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதை எப்படி சமாளிக்கிறது…. காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…. அரசுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை….!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருப்பதால் ஏழை எளிய மக்கள் வாங்குவதற்காக மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள முத்துக்கடையில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை கண்டித்துஅவர்கள் கோஷங்களை எழுப்பியுள்ளனர். இந்த போராட்டம் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்றது. இதனையடுத்து இந்த போராட்டத்தில் ராணிப்பேட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களுக்கா தர மடக்க…. பீர் பாட்டில் வைத்து குத்திடுவேன்…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

மதுபான கடையில் தகராறில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மேல்நேத்தபாக்கம் கிராமம் அருகில் அரசு மதுபான கடை ஒன்று இருக்கின்றது. இந்நிலையில் அகரம் கிராமத்தில் வசிக்கும் வினோத்குமார், மேல்நெல்லி கிராமத்தில் வசிக்கும் சரவணன் இருவரும் மதுபான கடைக்கு வந்து அங்கிருந்த ஊழியர்களிடம் பீர் பாட்டில்களை கடனாக தரும்படி  கேட்டுள்ளனர். ஆனால் ஊழியர் காசு இல்லாமல் மதுபாட்டில்கள் கொடுப்பதற்கு மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் மதுபான கடை ஊழியரை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்கூட யாருமே இல்லை…. கேபிள் டி.வி. ஆபரேட்டரின் விபரீத முடிவு…. ராணிப்பேட்டையில் சோகம்….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் தெருவில் கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக இருந்துள்ளார். இவரது சுதா என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு காரணமாக சுதா தனது குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே வீட்டில் மனைவி மற்றும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தீடிரென பற்றி எரிந்த மின்கம்பி…. பேரக்குழந்தைகளை பாதுகாத்த பாட்டி….குடும்பத்திற்கு நேர்ந்த சோகம்….!!

மின்கம்பி தீப்பிடித்து எரிந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ரத்னகிரி பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாரதாம்பாள் என்ற தாயார் இருந்துள்ளார். இந்நிலையில் சாரதாம்பாள் தனது பேரன் பேத்திகளுடன் வீட்டிற்கு வெளியே இருந்துள்ளார். அப்போது  அவரது வீட்டின் மேலுள்ள மின்கம்பியானது திடீரென பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக்கண்ட சாரதாம்பாள் தனது பேரன்,பேத்திகளை வீட்டுக்குள் போகும்படி கூறியுள்ளார். அதன்பின் அறுந்து விழுந்த மின் கம்பி  சாரதாம்பாள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

வீட்டின் வெளியே இருந்த மூதாட்டி…. திடீரென நடந்த சம்பவம்…. சோகத்தில் மூழ்கிய குடுபத்தினர்….!!

மின்கம்பம் அறுந்து விழுந்து மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கீழ்மின்னல் பகுதியில் வெங்கடேசன் என்பவர் கட்டிட தொழிலாளியாக வசித்து வருகின்றார். இவருக்கு சாரதாம்பாள் என்ற தாய் இருந்துள்ளார். இந்நிலையில் இவர் தனது பேரப்பிள்ளைகளுடன் வீட்டின் வெளியே இருந்தபோது திடீரென வீட்டிற்கும் மேலே செல்லும் மின்சார வயர் தீப்பற்றி எரிந்தது. இதனால் சாரதாம்பாள் தனது பேரப்பிள்ளைகளை வீட்டிற்குள் போகும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்குள் மின்சார கம்பி அறுந்து சாரதாம்பாள் மீது விழுந்து […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

“இதுல ஏதோ மர்மம் இருக்கு” தோண்டி எடுக்கப்பட்ட உடல்… ராணிப்பேட்டையில் பரபரப்பு…!!

மனைவி அளித்த புகாரின் பேரில் புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்வு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஜயலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் மல்லிகா சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். அங்கிருந்த அவருக்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது விஜயலிங்கம் திடிரென இறந்து விட்டதாக அவரது  உறவினர்கள் மல்லிகாவிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காலம் மாறிப் போச்சு… பெண்களே இப்படி செய்யலாமா…? காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை…!!

அரசு மதுபாட்டில்களை வாங்கி சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்று வந்த 4 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள மாந்தாங்கல் பத்மா நகர் பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி ராணிப்பேட்டை காவல்துறையினர் அப்பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராணிப்பேட்டை மாந்தாங்கல் பத்மா நகர் பகுதியில் வசிக்கும் கோகிலா, ராணி ஆகிய இருவரிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் அரசு மது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எனக்கு சந்தேகமா இருக்கு…உறவினர்கள் தெரிவித்த தகவல்…மனைவியின் பரபரப்பு புகார்…!!

தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக மனைவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் விஜயலிங்கம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மல்லிகா என்ற மனைவி இருக்கின்றார். இந்நிலையில் மல்லிகா சில நாட்களுக்கு முன்பு தனது பெற்றோரை சந்திப்பதற்காக சென்றிருக்கிறார். இதனை அடுத்து மல்லிகாவிற்கு ஒரு அதிர்ச்சி செய்தி காத்திருந்தது. அதாவது விஜயலிங்கம்  இறந்துவிட்டதாக அவரின் உறவினர்கள் மல்லிகாவிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து சந்தேகமடைந்த மல்லிகா தனது கணவர் இறப்பில் மர்மம் இருப்பதாக ராணிப்பேட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கணவனுக்கு நடந்த துயரம்…. எனக்கு சந்தேகமா இருக்கு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

கணவன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மனைவி கொடுத்த புகாரின் படி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தில் விஜயலிங்கம்- மல்லிகா என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மல்லிகா வாலாஜாபேட்டையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து கடந்த மாதம் 22-ஆம் தேதி கணவர் விஜயலிங்கம்  இறந்துவிட்டதாக மல்லிகாவிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கணவரின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மல்லிகா ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

அடுத்தடுத்து நடந்த துக்கம்…. என்ஜினீயர் பட்டதாரியின் விபரீத முடிவு…. திருப்பத்தூரில் சோகம்….!!

ரயில் முன் பாய்ந்து என்ஜினீயர் பட்டதாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி கொசப்பாளையம் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகன் ஜெகன் என்ஜினீயரிங் படித்துவிட்டு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராணிப்பேட்டை பகுதியில் ஒரு  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவரது தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். மேலும் ஜெகனின் பாட்டி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

காற்றில் பறக்க விடப்பட்ட விதிமுறைகள்.. அதிகாரிகளின் திடீர் சோதனை… பொதுமக்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

நடைமுறையிலுள்ள கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாத கடைகளுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஆற்காட்டுப்பகுதியில் கொரோனா இரண்டாம் அலை தாக்குதலை கட்டுக்குள் கொண்டுவர அரசு சார்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.இந்நிலையில் ஊடரங்கு கட்டுப்பாட்டுகளில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து  தாசில்தாரான காமாட்சி மற்றும் காவல்துறையினர் கொரோனோ கட்டுப்பாடுகள் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை சோதனை செய்துள்ளனர். அப்போது பல்வேறு கடைகளில் மற்றும் உணவகங்களில் மாஸ்க், சானிடைசர் போன்றவற்றை பயன்படுத்தாமலும், கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றாமலும் இருந்தது தெரியவந்தது. […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்படி பண்ணி வச்சிருக்காங்க… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்…!!

அரிசி கடையில் மூன்று லட்ச ரூபாய் பணத்தை  கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசித் தேடி வருகின்றனர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள வாலாஜா பகுதியில் அயாத்கான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்குச் சொந்தமான அரிசி கடையானது மகாதேவ மளிகை பகுதியில் அமைந்துள்ளது. இவர் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு வியாபாரம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தி.மு.க  கவுன்சிலரான அயாத்கான் இரவு நேரத்தில் கடையை அடைத்துவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை அடுத்து மறுநாள் காலை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இதே வாடிக்கையா போச்சு… வசமாக சிக்கிய வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

சட்டவிரோதமாக மது விற்பனை செய்த  வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புளியங்கண்ணு பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்போது சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் சங்கர் கணேஷ் என்பதும், சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எல்லாம் கரெக்டா கொடுக்கிறார்களா… கலெக்டரின் திடீர் ஆய்வு… பொதுமக்களுக்கு அறிவுரை…!!

ரேஷன் கடைகளில் பொது மக்களுக்கு கொரோனா நிவாரண உதவித்தொகை மற்றும் 14 பொருட்கள் வழங்கப்படுகிறதா என்பதை கண்டறிய கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்துள்ளார். தமிழக அரசு கொரோனா நிவாரண உதவித்தொகை 2,000 ரூபாய் பணம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்களை அந்தந்த ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி அந்தந்த பகுதியில் உள்ள ரேஷன் கடைகளில் தற்போது 2,000 ரூபாய் பணம் மற்றும் 14 வகையான மளிகை பொருட்களை ரேஷன் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தலைகுப்புற கவிழ்ந்ததால்… கோர விபத்தில் பறி போன உயிர்… கதறி அழுத குடும்பத்தினர்…!!

மின்சார கம்பத்தில் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பாறைமேடு பகுதியில் கட்டிட மேஸ்திரியான கஜேந்திரன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் வாலாஜா பகுதியில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் கஜேந்திரன் கலந்து கொண்டுள்ளார். அதன் பின்னர் திருமண விழா முடிந்தவுடன் கஜேந்திரன் பாறைமேடுக்கு இருசக்கர வாகனத்தில் புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து மேல்வேலம் பகுதியில் செல்லும் போது கஜேந்திரன் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்துடன்  சாலையோரம் இருக்கும் மின்சார […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

தண்ணீரைத் தேடி வந்த மான்… திடீரென நடந்த விபரீதம்… பொதுமக்களின் கோரிக்கை…!!

தண்ணீரைத் தேடி வந்த மான் ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் இருந்து திருப்பதிக்கு செல்லும்  ரயில்வே பாதையானது காட்டுபகுதி வழியாக அமைந்துள்ளது . இந்தக் காட்டுப் பகுதியில் ஏராளமான மான்கள் வாழ்ந்து வருகின்றது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மூன்று மான்கள் அப்பகுதியில் சென்ற ரயிலில் அடிபட்டு இறந்துவிட்டது. இந்நிலையில் அந்த காட்டுப்பகுதியில் இருந்து புள்ளிமான் ஒன்று தண்ணீரைத் தேடிக்கொண்டு அந்த ரயில் தண்டவாளத்திற்கு சென்றுள்ளது. அப்போது […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டீங்க…. 200 ரூபாய் அபராதம்…. காவல்துறையினர் அதிரடி….!!

அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டை மீறி முகக் கவசம் அணியாமல் இருந்த 23 பேருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது. ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள சிப்காட் பகுதியில் அரசு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை மீறி முககவசம் அணியாமல் இருந்த 23 பேருக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் தலைமையில் காவல்துறையினர் அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காத இரண்டு கடைகளுக்கும் காவல்துறையின் தலா 500 […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கானா விஷ்ணுவின்… கொரோன விழிப்புணர்வு பாடல்… வெளியிட்ட மாவட்ட கலெக்டர்…!!

கானா விஷ்ணு பாடிய கொரோனா விழிப்புணர்வு பாடலை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவி வந்தபோதிலும் பொதுமக்கள் சிலர் விழிப்புணர்வு இன்றி சாலையில் சுற்றித் திரிகின்றனர். மேலும் சிலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் தொற்று பரவும் அச்சம் இல்லாமல் வெளியே செல்கின்றனர். இதனால் காவல் துறையினரும் பல்வேறு தரப்பினரும் பொதுமக்களுக்கு நோய்த் தொற்று பரவாமல் இருப்பதற்காக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வைத்த கானா […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

இப்போதான் வெளிய வந்தாரு… சுற்றி வளைத்த மர்ம கும்பல்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

ஜாமீனில் வெளியே வந்தவரை மர்ம கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம் பகுதியில் கார்த்திகேயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மீது வழிப்பறி, கொலை போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. கடந்த ஆண்டு கார்த்திகேயனை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்து விட்டனர். அதன் பின்னர் கார்த்திகேயன் ஜாமினில் கடந்த 4ஆம் தேதி சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் மது […]

Categories

Tech |