ராணிப்பேட்டையில் காவல்துறையினர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் காவல்துறை ஏட்டாக சுரேஷ்குமார் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் இவர் காவல் நிலைய பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தனது அறைக்கு செல்வதாக கூறினார். அதன்பின் அவரது மகள் சுரேஷ்குமாரின் அறையை திறக்க முயற்சித்தபோது கதவை உள்பக்கமாக பூட்டியிருந்துள்ளார். இதையடுத்து அவரது மகள் ஜன்னல் வழியாக அறையினுள் பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் தெரிய வந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த […]
