ராட்சத குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக சாலையில் கழிவு நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னை மாவட்டத்தில் அம்பத்தூர், கொரட்டூர், திருமங்கலம், கோயம்பேடு, மாதவரம், முகப்பேர், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் கொடுங்கையூர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு ராட்சத குழாய் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றது. இந்த ராட்சத குழாய் பாடி, மாதவரம் மற்றும் மூலக்கடை வழியாக செல்லும். இந்த நிலையில் ராட்சத குழாய் அமைந்துள்ள பகுதியான தாதங்குப்பதில் நேற்று காலை 11 மணியளவில் திடீரென உடைப்பு ஏற்பட்டுள்ளது. […]
