ராட்சத அலையில் சிக்கிய நான்கு தொழிலாளர்கள் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள ஆண்டவர் குப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தில் இரும்பு தகடால் ஆன கூடாரம் அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தார்கள். இவர்களில் சுமார் 25 பேர் ராமகிருஷ்ண நகரில் இருக்கும் கடற்கரையை சுற்றி பார்க்க சென்றுள்ளார்கள். இதில் எட்டு பேர் கடலில் இறங்கி குளித்துள்ளார்கள். எட்டு பேரும் அலையில் சிக்கினர். இதில் நான்கு பேர் தப்பித்து கரை வந்தார்கள். […]
