அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது ராஜ மரபினை மீறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு முறைப்பயணமாக பிரித்தானியாவிற்கு வரும் மற்ற நாட்டை சேர்ந்த தலைவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ளும் போது மகாராணியார் வருவதற்கு முன்னதாகவே அந்த இடத்திற்கு வருவது வழக்கம். அதேபோல் நிகழ்ச்சி முடிந்தவுடன் மகாராணியார் அந்த இடத்தை விட்டு புறப்பட்டு சென்ற பிறகே அங்கிருப்பவர்கள் புறப்பட வேண்டும். இதுதான் ராஜ மரபாக காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. […]
