ரஜினியை கட்டாயப்படுத்தி நடிக்க அனுப்பி வைத்ததாக அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார். நேற்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் 2019-ஆம் ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விழாவில் பேசிய ரஜினி, ‘நான் நடத்துனராக இருந்தபோது என் நண்பர் ராஜ்பகதூர் தான் எனக்குள் இருக்கும் நடிப்புத்திறனை அடையாளம் கண்டுகொண்டார். […]
