கடந்த 9ஆம் தேதி அருணாச்சலப் பிரதேச மாநிலம் பகுதியில் இருக்கக்கூடிய இந்தியா – சீனா இடையான எல்லை கோட்டு கட்டுப்பாட்டு பகுதியில் சீன வீரர்கள் அத்திமீறி இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி செய்து இருக்கின்றனர். இந்த முயற்சியை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள். இது தொடர்பாக டிசம்பர் 11ஆம் தேதி இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக இன்றைய தினம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்ற […]
