ராஜகண்ணு மனைவிக்கு உதவ வேண்டுமென்று சூரியாவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் கடிதம் எழுதியுள்ளார். நடிகர் சூர்யாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தங்கள் நிறுவனத்தின் சார்பில் தயாரித்து வெளிவந்துள்ள ஜெய்பீம் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள சம்பவத்தில் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி மற்றும் குடும்பத்தினருக்கு நீதியும் நிவாரணமும் கிடைப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களப் போராட்டங்களையும், சட்ட போராட்டங்களையும் நீண்ட காலமாக தொடர்ந்து நடந்தியது. […]
