சட்டசபை காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராஜேஷ்குமார் எம்எல்ஏ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை வழங்கியுள்ளார். அந்த மனுவில், “கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி-களியக்காவிளை இடையிலான 55 கிலோ மீட்டர் சாலை மற்றும் காவல்கிணறு-பார்வதிபுரம் வரையிலான 22 கிலோ மீட்டர் சாலைகள் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு சேதமடைந்துள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி அரசு அந்த சாலையை சீரமைக்க வேண்டும். கிளியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை மக்கள் பயன்பெறும் வகையில் […]
