கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி ஆவின் நிறுவனங்களில் பணி வழங்குவதாக கூறி சுமார் மூன்று கோடி ரூபாய் அளவிற்கு பணம் வசூல் செய்தார் என்று குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜிக்கு கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. அந்த நிபந்தனை ஜாமீனில் அவர் தமிழ்நாட்டிற்கு உள்ளே தான் இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டை விட்டு அவர் […]
