அதிமுக எம்எல்ஏ ராஜேந்திரன் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அரியலூர் அதிமுக எம்எல்ஏவும், அரசு தலைமை கொறடாவுமான ராஜேந்திரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு அடைப்பை சீரமைக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார்.
