சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி ராஜேந்தர் பால்சிங் பாட்டியா வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சத்தீஸ்கர் மாநிலம், ராஜ்நந்த்கான் மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்தர் பால்சிங் பாட்டியா சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜக மூத்த தலைவர் ஆவார். இவர் குஜ்ஜி சட்டமன்ற தொகுதியில் மூன்று முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பாஜகவில் அரசியல் வர்த்தகம் மற்றும் தொழில் துறை மந்திரியாக இருந்தவர். இந்நிலையில் அவர் தனது வீட்டின் அறையில் பேனில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். […]
