திமுக செய்தி தொடர்பாளர் ராஜீவ் காந்தி மாநில மாணவரணி தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். திமுகவினுடைய மாநில மாணவரணி தலைவர், செயலாளர், இணை செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. திமுக சட்டப்பதிகளின்படி இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக தலைமை நிலையத்திலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றார். அதன்படி திமுகவினுடைய மாணவரணி தலைவராக ராஜீவ் காந்தி அறிவிக்கப்பட்டிருக்கிறார். ஏற்கனவே கொள்கை பரப்பு இணைச் செயலாளராக செயல்பட்டு வந்தவர் தற்பொழுது மாநில மாணவரணி தலைவராக […]
