சிவகங்கை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி என ஒட்டுமொத்த தென் தமிழகத்துக்கும் மருத்துவ தலைநகரமாக விளங்கக்கூடியது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை. இந்த கட்டிடம் 1984-ல் கட்டப்பட்டது. சில வருடங்களாக கட்டிடத்தின் சுவர் பகுதிகளில் ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையால் மதுரை அரசு மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு 90-வது வார்டின் ஆப்பரேஷன் தியேட்டர் மேற்கூரையின் சிமென்ட் பெயர்ந்து விழுந்தது. இதனால் ஆப்பரேஷன் […]
