சிம்மம் ராசி அன்பர்களே: இன்று முன்னேற்றம் கருதி சில முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். துணிச்சலாக எந்தவொரு காரியத்திலும் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுவது நல்லது. அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். அரசாலும் நல்ல ஆதாயம் உண்டாகும். அரசுத் துறையில் இருப்பவர்களுக்கும் நற்செய்தி கிடைக்கும். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படக்கூடும். இன்றைய நாள் உங்களுக்கு அனைத்தும் வெற்றியடையக்கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். […]
